Thursday, July 7, 2011

புத்துலகக் கோட்பாடு

புத்துலகக் கோட்பாடு

"புதியதோர் உலகம் செய்வோம்"- சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசன்.

"எப்படி செய்வது" என்னும் சிந்தனையில் உருப்பெற்றதே புதிய உலகத்தின் பூபாளம்.புதிய பார்வை பார்க்கப் பழகி, புதிய வாத்தைகளால் பழையவற்றை இடப்பெயர்ச்சி செய்து, புதிய அணுகுமுறைகளால்- புதிய வாழ்வைத் தொடங்கும் உலகமே புதிய உலகமாகும்.

இந்தப் புதிய உலகில் வாழும் எந்தவொரு மனிதரும் புதியவராகவே பரிணாம வளர்ச்சி பெற்று உயர்நிலையில் அமர்வர்!

பயன்: பழைய பதிவுகளும் அதனால் உருவாகும் மனமும் குறுகி விட்டதாலும் - இறுகிப் போனதாலும் வாழ்வின் ஆனந்தம் காணாமல், ஏதோ சில பழக்கங்களுக்கு அடிமையாகி- அல்லாடிக் கொண்டிருக்கும் மானுடம் - விட்டு விடுதலையாகி - ஆளுமை பெற்று என்றென்றும் நிலைக்கும் நிரந்தர ஆனந்தம் பெற்று அமைதி காண்பதற்கான உலகமே புதிய உலகம்!

இதையே "பழையன கழிதலும்- புதியன புகுதலும்
வழுவல கால வகையினான" ... என்கிறது தொல்காப்பியம்!

இங்கே, அலுப்பும் - சலிப்பும் - வெறுப்பும் - விரக்தியும் இருக்காது. மாறாக
ஊக்கமும்-உற்சாகமும்-குதூகலமும் பொங்கும் அன்பு மனமே மிஞ்சும்
ஆதலினால் இங்கு ஆனந்தமே தங்கும்!

கொண்டாட்டம்: கணந்தோறும் போகி! ஒவ்வொரு கணமும் பழையன கழிய, புதியன பார்க்கும் மனோபாவத்தை வளர்க்கவே இந்த கொண்டாட்டம்.

ஒவ்வொரு கணமும் - புதிய மனம் கொள்வோம் !
புதிய மனக்காரர் ஒவ்வொருவரும்- புதிய மனிதரென்போம்!!
புதிய மனிதர் வாழும் புவியே - புதிய உலகமென்போம்!!!

புதிய வார்த்தைகள்:

இலக்கைக் குறியுங்கள்
ஈடுபடுங்கள்
பாடுபடுங்கள்
கோடுதொடுங்கள்
கொண்டாடுங்கள்

கொண்டாடவே வாழ்க்கை...

குழந்தைகளிடம் பெற்றோர்கள் ...

அன்பைத்தான் சொல்கிறார்கள்
ஆனால்
அன்பாகச் சொல்லுவதில்லை
இதை நினைவில் கொள்ளுங்கள்...

எதைக் கண்டுகொள்கிறீர்களோ
அதுவே வளர்கிறது

அறிந்து...
புரிந்து...
உணர்ந்து...
தெளிவதே
ஞானம்.
அறிய-கல்
புரிய-பழகு
உணர-நில்
உயர-வாழ்

தொடர்பு கொள்ள :

முகவரி:

ம. திருவள்ளுவர்
பி-302,ஆத்ரேயா அடுக்ககம் வில்லியம்ஸ் சாலை
கண்டோன்மென்ட்
திருச்சி-620001.

கைபேசி: 9442631225.
மின்னஞ்சல்: mtv@bheltry.co.inAddress:

M.Thiruvalluvar,
B-302 Aathreya Apartments,
Williams road,
Cantonment,
Trichy-620001.

Mobile: 9442631225
E-Mail: mtv@bheltry.co.in